/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர்கள் தனித்திறனை வளர்த்துக் கொள்ளணும்!
/
ஆசிரியர்கள் தனித்திறனை வளர்த்துக் கொள்ளணும்!
ADDED : பிப் 08, 2024 11:39 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, புளியம்பட்டி பி.ஏ., கல்வியியல் கல்லுாரியில், ஒன்பதாவது பட்டமளிப்பு விழா நடந்தது. பி.ஏ., கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்தார். துணை தலைவர் லட்சுமி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார்.
அண்ணா பல்கலை கல்வியியல் துறை தலைவராக பணியாற்றிய முன்னாள் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ''நவீன உலகில் ஆசிரியர்களின் பங்கு மற்றும் இன்றைய ஆசிரியர் பணி, கடந்த காலத்தில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது.
ஆசிரியர்கள், தனித்திறமைகளை வளர்த்துக்கொள்வதுடன், புதுப்பித்துக்கொள்ள வேண்டும். சவால்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும்,'' என்றார்.பட்டமளிப்பு விழாவை தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.

