/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆசிரியர் என்பது ஒரு புனிதமான உறவு'
/
'ஆசிரியர் என்பது ஒரு புனிதமான உறவு'
ADDED : செப் 25, 2024 12:07 AM

கோவை : நன்னெறிக் கழகத்தின் 68ம் ஆண்டு விழா மற்றும் 'தமிழ் நெறிச் செம்மல்' விருது வழங்கும் விழா, கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் உள்ள, சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் நடந்தது. இதில் தமிழ் பேராசிரியர், பேச்சாளர் ராஜாராமுக்கு தமிழ் நெறிச் செம்மல் விருது வழங்கப்பட்டது.
விழாவில் சுகிசிவம் பேசுகையில், ''மேடைப்பேச்சு என்பது கலை, விஞ்ஞானம், தொழில்நுட்பம் என பல பரிமாணங்களை கொண்டுள்ளது. இந்த பேச்சு பலரின் மனவலியை போக்கும். அப்படி பலரின் வலியை தனது பேச்சால் நீக்கியவர் ராஜாராம். ஒரு ஆசிரியராக இருந்து அற்புதமான பணிகளை செய்தவர். ஆசிரியர் என்றால் ஒரு வேலை, சேவை என பலர் நினைக்கின்றனர். ஆனால் ஆசிரியர் என்பது ஒரு புனிதமான உறவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
விழாவில், எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா, பேச்சாளர் பர்வீன் சுல்தானா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நன்னெறிக் கழக தலைவர் பத்மநாபன், துணை தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.