/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வகுப்பறையில் கணக்கு கற்பிப்பது அப்புறம்; இப்ப கணக்கெடுப்பு நடத்துவது முக்கியம்
/
வகுப்பறையில் கணக்கு கற்பிப்பது அப்புறம்; இப்ப கணக்கெடுப்பு நடத்துவது முக்கியம்
வகுப்பறையில் கணக்கு கற்பிப்பது அப்புறம்; இப்ப கணக்கெடுப்பு நடத்துவது முக்கியம்
வகுப்பறையில் கணக்கு கற்பிப்பது அப்புறம்; இப்ப கணக்கெடுப்பு நடத்துவது முக்கியம்
ADDED : ஜூலை 13, 2025 11:32 PM
கோவை; மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு அடிப்படை கல்வி வழங்கும் பணிகள், கோவையில் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ஆசிரியர்களை ஈடுபடுத்தி, கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
2022ல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், 15 வயதுக்கு மேற்பட்ட, கல்வி கற்காதோருக்கு எழுத்தறிவு பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் ஒரு கட்டமாக, கோவை மாவட்டத்தில் கடந்த, ஜூன் 15ம் தேதி நடைபெற்ற எழுத்தறிவு தேர்வில், 7,306 பேர் பங்கேற்று அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
திட்ட பணிகளை, வரும் நவம்பருடன் முடிக்க அறிவுறுத்தப்பட்டு இருப்பதால், மீண்டும் கணக்கெடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இது குறித்து, திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் வெளிமாவட்ட மக்களின் குடிபெயர்வு அதிகரித்து வருகிறது. எனவே, புதியவர்களும் கணக்கெடுக்கப்பட வேண்டும். காரமடை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு, எஸ்.எஸ்.குளம், பேரூர் உள்ளிட்ட வட்டாரங்களில் முழுமையான எழுத்தறிவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கோவை நகரம் உள்ளிட்ட சில பகுதிகளில், மீண்டும் கணக்கெடுப்பு தேவைப்படுவதால், அதற்கான பணி ஆசிரியர்கள் உதவியுடன் துவங்கப்பட்டுள்ளது. பள்ளி நேரம் முடிந்த பின், ஆசிரியர்களை இந்த பணிகளில் ஈடுபடுத்தவும், ஜூலை 15ம் தேதியில் இருந்து, நவ., 3வது வாரத்துக்குள், திட்டப் பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.