/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலுார் குப்பை கிடங்கை 24 மணி நேரமும் கண்காணிக்க குழு
/
வெள்ளலுார் குப்பை கிடங்கை 24 மணி நேரமும் கண்காணிக்க குழு
வெள்ளலுார் குப்பை கிடங்கை 24 மணி நேரமும் கண்காணிக்க குழு
வெள்ளலுார் குப்பை கிடங்கை 24 மணி நேரமும் கண்காணிக்க குழு
ADDED : பிப் 13, 2025 12:16 AM

கோவை; கோவை மாநகர பகுதியில் சேகரமாகும் குப்பை, வெள்ளலுார் கிடங்கில் மலைக்குன்று போல் கொட்டப்பட்டிருக்கிறது. மீத்தேன் வாயு உருவாகி, கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத் தாக்கத்தால், தீ விபத்து ஏற்படுகிறது.
கடந்தாண்டு ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த முடியாமல், மாநகராட்சி அதிகாரிகள் தடுமாறினர். கோடை வெயில் நெருங்குவதால், முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
ஐந்து லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட தொட்டி, இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலைத்தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
1,000 மீட்டர் நீளத்துக்கு, தண்ணீர் குழாய்கள் மற்றும் தீயணைப்பு முனையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வெளிநபர்கள் நுழைவதை தடுக்க உயர்மட்ட கண்காணிப்பு கோபுரம், 20 இடங்களில் 'சிசி டிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. 12 டீசல் மோட்டார் பம்ப் செட்டுகள், தீயணைப்பு கருவியுடன் இணைக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பணியாளர்களுடன் கூடிய நான்கு தண்ணீர் டேங்கர் லாரிகள், ஜெட்டிங் ராடுடன் கூடிய நான்கு வாகனங்கள், 24 மணி நேரமும் தீயை அணைக்க கூடிய வகையில் உள்ளன.
இல்லாத இடங்களில் சுற்றுச்சுவர் மற்றும் வேலி அமைக்க, மதீப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது; விரைவில் டெண்டர் கோர, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சுற்றுச்சுவரை ஒட்டி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, பெறப்பட்ட சுத்திகரித்த நீர், செயற்கையாக குட்டை உருவாக்கி தேக்கப்பட்டுள்ளது.
குப்பை கிடங்கு வளாகத்தில் தெருவிளக்குகள் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
24 மணி நேரமும் தீயணைப்பு துறையினர் கண்காணிக்க, வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிக்க, குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
தெற்கு மண்டல உதவி கமிஷனர் குமரன், நிர்வாக பொறியாளர் இளங்கோவன், உதவி நிர்வாக பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.