/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ணா கல்லுாரியில் தொழில்நுட்ப மாநாடு
/
ராமகிருஷ்ணா கல்லுாரியில் தொழில்நுட்ப மாநாடு
ADDED : பிப் 14, 2026 05:21 AM

கோவை: துடியலுார், வட்டமலைபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி மற்றும் நாக்பூர், ஜவஹர்லால் நேரு அலுமினியம் ஆராய்ச்சி வளர்ச்சி மற்றும் வடிவமைப்பு மையம் ஆகியவை ஒன்றிணைந்து சர்வதேச மாநாட்டை நடத்தின.
' ஸ்மார்ட் தொழில்நுட்பங்களால் எதிர்காலத்தை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் நடந்த மாநாட்டிற்கு எஸ்.என்.எஸ். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.
டெல்லி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் உறுப்பினர் செயலாளர் கிருஷ்ணகாந்த், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன மூத்த விஞ்ஞானி ரங்கநாதன், சென்னை அண்ணா பல்கலை தொழில்நுட்ப வணிகமயமாக்கல் அதிகாரி விக்னேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
ஆட்டோமேஷன் மற்றும் ஸ்மார்ட் டெக்னாலஜி ஆகியவற்றில் புதுமைகளை முன்னிலைப்படுத்தும், 117 ஆய்வுக் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. கல்லுாரி முதல்வர் சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

