இந்துஸ்தான் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு
இந்துஸ்தான் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு
ADDED : மார் 10, 2026 05:37 AM

அ நிறம் | அளவு
கோவை: இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரி தகவல் தொழில்நுட்ப துறை சார்பில், 'ஸ்பைடர்' என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது.
இதில் ஐடியாத்தான், வெப் டிசைனிங், பேப்பர் டிசைனிங் உள்ளிட்ட எட்டு தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமற்ற போட்டிகள் நடந்தன. 550 மாணவர்கள் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப துறை மாணவர்கள் இணைந்து இ-வேஸ்ட் கண்காட்சி நடத்தினர்.
கருத்தரங்கு மலரை, இந்துஸ்தான் கல்வி நிறுவன அறங்காவலர் சரஸ்வதி வெளியிட்டார். நிர்வாக அறங்காவலர் பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
