sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பவானி ஆற்றுக்கு வரவிருக்கும் தொழில்நுட்ப குழு

/

பவானி ஆற்றுக்கு வரவிருக்கும் தொழில்நுட்ப குழு

பவானி ஆற்றுக்கு வரவிருக்கும் தொழில்நுட்ப குழு

பவானி ஆற்றுக்கு வரவிருக்கும் தொழில்நுட்ப குழு


ADDED : மார் 10, 2024 10:48 PM

Google News

ADDED : மார் 10, 2024 10:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்;கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிக்க வருகின்றனர்.பில்லூர் அணை, பம்பிங் ஹவுஸ்களில் இருந்து திடீரென தண்ணீர் திறந்துவிடும் போது, பவானி ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருக்கும். அச்சமயத்தில் பவானி ஆற்றில் குளிப்பவர்கள், தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

இங்கு அத்துமீறி குளிப்பவர்களை அப்புறப்படுத்தும் பணியில் லைப் கார்ட்ஸ் பிரிவு போலீசார் தொடர்ந்து 24 மணி நேரமும் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மக்களை எச்சரிக்கை செய்யும் விதமாக, பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போது, அலாரம் வைக்க போலீசாரால் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

பவானி ஆற்றின் ஆபத்தான பகுதிகள் என வெள்ளிப்பாளையம் பாயிண்ட் 1, 2, 3, சிறுமுகை, ஆலாங்கொம்பு, ராமர் கோவில், அம்மன் பழத்தோட்டம், கல்லார் கார்டன், தூரி பாலம், விளாமரத்தூர் என 19 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் சென்னையில் இருந்து வரும் தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, அலாரம் வைப்பதற்கான முன் ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்ள உள்ளனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.----






      Dinamalar
      Follow us