/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டுப்புழு வளர்க்க தொழில்நுட்ப பயிற்சி
/
பட்டுப்புழு வளர்க்க தொழில்நுட்ப பயிற்சி
ADDED : ஜூலை 06, 2025 11:32 PM
அன்னுார்; 'பட்டு வளர்ப்பு தொழிலில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறலாம்,' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பட்டு வளர்ப்பு துறை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை :
அன்னுார் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், பட்டு வளர்ப்பு தொழில் செய்வதன் மூலம், மாதம் 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறலாம்.
மத்திய தொகுப்பில் இருந்து மல்பெரி நடவு, பட்டுப்புழு வளர்ப்புக்கு மானியம் வழங்கப்படுகிறது. உயர்ரக மல்பெரி செடி நடவு செய்ய, ஒரு ஏக்கருக்கு, 45 ஆயிரம் ரூபாய், புழு வளர்ப்பு கொட்டகை 1100 சதுர அடியில் அமைக்க 2 லட்சத்து 43 ஆயிரத்து 750 ரூபாய், பட்டுப்புழு வளர்ப்பு உபகரணங்களுக்கு 37 ஆயிரத்து 500 ரூபாய் என ஒரு ஏக்கருக்கு மூன்று லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
இரண்டு ஏக்கர் மல்பெரி பயிரிடுவோருக்கு, 4 லட்சத்து 94 ஆயிரத்து 500 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. பட்டு புழு வளர்ப்பு காலம் 15 நாட்கள் மட்டுமே.
பட்டுபுழுக்களுக்கு தினமும் இரண்டு வேளை உணவளித்தால் போதும். பட்டுப்புழு கழிவுகள் விவசாயத்துக்கு உரமாக பயன்படுகிறது. மல்பெரியில் மருந்தடிப்பது மற்றும் உர செலவு குறைவு.
மத்திய, மாநில அரசு அலுவலர்களால், ஆறு நாட்கள் இலவசமாக தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, அன்னுார் பட்டு வளர்ப்பு சேவை மையத்தை 96594 92430, 90923 13528 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.