/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ சக்தி இன்ஜி., கல்லுாரியில் தொழில்நுட்ப பயிலரங்கு
/
ஸ்ரீ சக்தி இன்ஜி., கல்லுாரியில் தொழில்நுட்ப பயிலரங்கு
ஸ்ரீ சக்தி இன்ஜி., கல்லுாரியில் தொழில்நுட்ப பயிலரங்கு
ஸ்ரீ சக்தி இன்ஜி., கல்லுாரியில் தொழில்நுட்ப பயிலரங்கு
ADDED : ஆக 20, 2025 12:56 AM

கோவை; சின்னியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் தொழில்நுட்பக் கல்லுாரியில், 'நுண்ணறிவு விவசாய தொழில்நுட்பங்கள்' குறித்த பயிலரங்கம் நடந்தது.
வேளாண் பல்கலை இயற்கை வளங்கள் மேலாண்மை இயக்குனர் பாலசுப்ரமணியம், துல்லிய மேலாண்மை வாயிலாக இடுபொருட்களை குறைத்து, வருவாயை அதிகரிக்கும் வழிமுறைகளை தெரிவித்தார்.
கோவை மண்டல மத்திய வேளாண் இன்ஜினியரிங் நிறுவன முதன்மை விஞ்ஞானி ரவீந்திர நாயக், தானியங்கள், தோட்டக்கலை பயிர்களின் சேமிப்பில் பயன்படும் சென்சார் குறித்து விளக்கினார். காரைக்கால் பண்டிட் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லுாரி பேராசிரியர் சரவணன், தமிழ்நாடு வேளாண் பல்கலை நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை தலைவர் முரளி அர்த்தநாரி உள்ளிட்டோர் நுண்ணறிவு விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, வளர்ச்சியடைந்த பாரதத்தை, 2047ல் உருவாக்குவது குறித்து பேசினர்.
கல்லுாரி நிறுவனர் தங்கவேலு தலைமை வகித்தார். முதல்வர் சக்திவேல், வேளாண் இன்ஜினியரிங் துறை தலைவர் கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.