/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காருண்யா பல்கலையில் தொழில்நுட்ப திருவிழா
/
காருண்யா பல்கலையில் தொழில்நுட்ப திருவிழா
ADDED : மார் 22, 2025 11:18 PM

கோவை: காருண்யா பல்கலையில், 'மைண்ட்கிராப் 2025' என்ற பெயரில், புதுமை மற்றும் தொழில்நுட்ப திருவிழா, துணைவேந்தர் பிரின்ஸ் அருள்ராஜ் தலைமையில் நடந்தது.
பிராட்லைன் இன்னோவேஷன்ஸ் - சென்னை நிறுவனத்தின், முதன்மை நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி அறுமுகம் முருகையா, விழாவை துவக்கி வைத்தார்.
விழாவில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள பரிசுகளுடன், தொழில்நுட்ப உரைகள், போட்டிகள், முக்கிய ஆராய்ச்சிகள் என, நுாறுக்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடந்தன.
மைண்ட்கிராப் தொழில்நுட்ப மாதிரி கண்காட்சியில், பல துறைகளை உள்ளடக்கிய நுாறுக்கும் மேற்பட்ட புதுமையான திட்டங்கள் வெளியிடப்பட்டன. ஏ.ஐ.,அடிப்படையிலான மனித- - விலங்கு மீட்பு அமைப்பு, புத்திசாலியான மருந்து விநியோகிப்பான், தாமரையைப் பயிரிடுவதற்கான யு.ஏ.வி.,கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மாதிரிகள் போன்றதிட்டங்கள் கவனம் ஈர்த்தன.