/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் அதிகரிக்கிறது 'டீன் ஏஜ்' கர்ப்பம்: காரமடை, சூலுார், மதுக்கரை, ஆனைமலையில் அதிகம்
/
கோவையில் அதிகரிக்கிறது 'டீன் ஏஜ்' கர்ப்பம்: காரமடை, சூலுார், மதுக்கரை, ஆனைமலையில் அதிகம்
கோவையில் அதிகரிக்கிறது 'டீன் ஏஜ்' கர்ப்பம்: காரமடை, சூலுார், மதுக்கரை, ஆனைமலையில் அதிகம்
கோவையில் அதிகரிக்கிறது 'டீன் ஏஜ்' கர்ப்பம்: காரமடை, சூலுார், மதுக்கரை, ஆனைமலையில் அதிகம்
ADDED : ஜூலை 24, 2025 08:29 PM
- நமது நிருபர் -
பதின்பருவ வயதில் கர்ப்பம் என்பது தமிழகத்தில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், கோவையில் சுகாதாரத்துறை, சமூகநலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு, குடும்ப நலத்துறை, போலீசார் என பல்துறைகள் இணைந்து விழிப்புணர்வு செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
20 வயதுக்குள் பெண் பிள்ளை கருவுருவது என்பது, உலகளவில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாக, உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
இது, பெண்களின் உடல், மனம் மற்றும் சமூக நலன், அவர்களின் கல்வி, பொருளாதார எதிர்காலத்தையும் பாதிக்கின்றது.
மாநில சுகாதாரத்துறையின் கீழ், 'ஹெச்.ஐ.எம்.ஐ.எஸ்.,' எனும் இணையதளத்தில், கர்ப்பிணிகள் விபரங்கள், பரிசோதனைகள் குறித்து பதிவேற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, 2019 ஏப்., முதல் 2024 மார்ச வரை, கர்ப்பிணிகளின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் பதிவு செய்யப்பட்ட, 49,93,093 கர்ப்பிணிகளில், 62,870 பேர் இளம்பெண்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இச்சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருவதும் தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டத்தில், சமூகநலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு, போலீசார், குடும்பநலத்துறை, சுகாதாரத்துறை பிரிவினர் ஒருங்கிணைந்து பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, காரமடை, சூலுார், மதுக்கரை, ஆனைமலை பகுதிகளில் இளம் வயது கர்ப்பம் என்பது, பிற இடங்களை காட்டிலும் சற்று அதிகளவில் உள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, கோவை மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் அம்பிகா கூறுகையில், ''டீன் ஏஜ் கர்ப்பம் என்பது முற்றிலும் தவிர்க்கவேண்டிய ஒன்று.
கோவையில் டீன் ஏஜ் கர்ப்பம் அதிகம் பதிவான இடங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றோம்.
மக்கள் கூடும் இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். கோவையில் காரமடையில் 14 பதிவுகளும், தெற்கு மண்டலத்தில் 9 பதிவுகளும், சூலுாரில் 8 பதிவுகளும், மதுக்கரையில் 7 மற்றும் ஆனைமலையில் 6 பதிவுகளும் கிடைத்துள்ளன,'' என்றார்.
விற்பனை கண்காணிப்பு குடும்பநலத்துறை பிரிவு துணை இயக்குனர் கவுரி கூறுகையில், '' டீன் ஏஜ் கர்ப்பத்தை, இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். 18 - 20 வயதுக்குள் என்பது, போக்சோ பிரிவில் பதிவாகும். 18- 19 வயதில் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். தொடர்ந்து ஒருங்கிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றோம். வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களும் இப்பட்டியலில் உள்ளனர். மருந்து கட்டுப்பாட்டு துறையுடன் இணைந்து, கருக்கலைப்பு மருந்து விற்பனை கண்காணிக்கப்படுகிறது,'' என்றார்.