/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பார் ஊழியருக்கு அடி, உதை; வாலிபர் சிறையிலடைப்பு
/
பார் ஊழியருக்கு அடி, உதை; வாலிபர் சிறையிலடைப்பு
ADDED : ஆக 03, 2025 09:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை சாய்பாபா காலனி நெசவாளர் காலனியை சேர்ந்தவர் நரேந்திரன், 51.
கோபாலபுரம் பகுதியில் உள்ள ஓட்டல் பாரில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டம் சொக்கம்பட்டியை சேர்ந்த சந்தோஷ், 23 என்பவர் மது அருந்தி விட்டு நரேந்திரனுடன் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து நரேந்திரன், ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் சந்தோஷை கைது செய்து சிறையிலடைத்தனர்.-