/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
/
கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : மே 17, 2025 05:00 AM
வால்பாறை : வால்பாறை நகர் டோபிகாலினி, கன்னிமார், கருப்பராய சுவாமி கோவிலின், 49வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், 7:00 மணிக்கு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. காலை, 9:30 மணிக்கு திருக்கொடி ஏற்றபட்டது. தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில், வரும், 23ம் தேதி மாலை, 4:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர்.
வரும், 25ம் தேதி சிறுவர் பூங்கா ஆதிபராசக்தி கோவிலில் இருந்து, பட்டு ஊர்வலம் எடுத்து வரப்படுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும், 25ம் தேதி வரை நடைபெறும் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.