/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் நிலங்களை மீட்க வேண்டும்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
/
கோவில் நிலங்களை மீட்க வேண்டும்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
கோவில் நிலங்களை மீட்க வேண்டும்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
கோவில் நிலங்களை மீட்க வேண்டும்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
ADDED : ஜன 28, 2025 11:20 PM

ஆனைமலை; ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும், என, ஹிந்து முன்னணி கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனைமலை அடுத்துள்ள, வேட்டைக்காரன்புதுாரில் ஹிந்து முன்னணி கோவை கோட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கோவை தெற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில செயலாளர் அண்ணாதுரை, மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், திருப்பரங்குன்றம் மலையின் புனித தன்மையை களங்கப்படுத்திய நபர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வழிபாட்டுக்கான வசதிகள் செய்து தர வேண்டும்.
ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும். ரயில் கவிழ்ப்பு சதி திட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். புழல் சிறை அதிகாரிகள் மீதான பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புத்தகத் திருவிழாவில் சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. கோவையில் கோவில்கள் முன்பாக உள்ள இறைச்சி கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
கோவை மாவட்ட கிராமங்களில் சர்ச்சைக்குரிய ஜெபக்கூடம் கட்டுமானத்திற்கு வருவாய்த் துறை அளித்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணன், கோட்டச் செயலாளர்கள் பாலச்சந்திரன், அசோக்குமார், பாலன், ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

