/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் மண்டல பூஜை; விழா நிர்வாகிகள் ஆலோசனை
/
கோவில் மண்டல பூஜை; விழா நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : நவ 12, 2024 05:33 AM
வால்பாறை ; வால்பாறை ஐயப்பசுவாமி கோவில் மண்டல பூஜை திருவிழா குறித்த, ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள, ஐயப்ப சுவாமி கோவிலின், 38ம் ஆண்டு மண்டல பூஜைத்திருவிழா, டிசம்பர் மாதம் 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம், அகிலபாரத ஐயப்ப சேவா சங்க (டவுன்) கிளை தலைவர் மூர்த்தி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், இந்த ஆண்டு மண்டல பூஜை திருவிழா வரும், 13,14 மற்றும், 15ம் தேதிகளில் திருவிழா சிறப்பாக நடத்துவது என்றும், கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், அகிலபாரத ஐயப்ப சேவா சங்க செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் அழகிரிசாமி, விழா கமிட்டி நிர்வாகிகள் மருதமுத்து, செல்லப்பன், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.