/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவிப்பை மீறி குப்பை கோவில் வளாகம் அசுத்தம்
/
அறிவிப்பை மீறி குப்பை கோவில் வளாகம் அசுத்தம்
ADDED : ஜூலை 18, 2025 09:29 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவில் வளாகத்தில் வைத்துள்ள அறிவிப்பை மீறி, குப்பை கொட்டப்படுவதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, பழைய பஸ் ஸ்டாப் அருகே உள்ள பிளேக் மாரியம்மன் கோவில் வழியாக, ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்த கோவில் வளாகத்தின் அருகாமையில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளது.
கோவில் நுழைவுவாயில் முன், அதிகளவில் குப்பை கொட்டப்பட்டு வந்தது. இதை சுத்தம் செய்யக்கோரி மக்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுத்தம் செய்யப்பட்டது.
இது போன்ற செயல்கள் நடப்பதை தவிர்க்க, 'இங்கு குப்பை கொட்டக்கூடாது' என, அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அறிவிப்பையும் பொருட்படுத்தாமல், குப்பை குவிக்கப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்பவர்கள் மற்றும் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும், ஆடி மாதம் துவங்கி இருப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிப்படைவர். எனவே, குப்பையை அகற்றி, அந்த இடத்தை சுத்தப்படுத்த வேண்டும். குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.