/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு கால பூஜை திட்ட கோவில் பூஜாரிகள் கோரிக்கை
/
ஒரு கால பூஜை திட்ட கோவில் பூஜாரிகள் கோரிக்கை
ADDED : பிப் 25, 2024 08:34 PM
பொள்ளாச்சி:'ஹிந்துசமய அறநிலையத்துறையின், ஒரு கால பூஜை திட்ட கோவில்களில் பணியாற்றும் பூஜாரிகளுக்கு, மாத தொகுப்பு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்,' என கிராம கோவில் பூஜாரிகள் பேரவை நகர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிராம கோவில் பூஜாரிகள் பேரவை அமைப்பின் பொள்ளாச்சி நகர செயற்குழு கூட்டம், தேர்நிலையம் உண்ணாமுலை அம்மன் உடனமர் அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில் நடந்தது. கோவை மாவட்ட கோட்ட அமைப்பாளர் கோவிந்த்ஜி, புதிய பூஜாரிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
கோவை கோட்ட இணை அமைப்பாளர் கோபால், மாநகர மாவட்ட அமைப்பாளர் திருஞானசம்பந்தம், இணை அமைப்பாளர் ரங்கசாமி மற்றும் வி.எச்.பி., பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அனைத்து கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பூஜாரிகள் வருமானம், 72,000 ரூபாய் என்ற அரசாணையின்படி, அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் பாரபட்சமின்றி வருமானச்சான்றிதழ் வழங்கணும்.
ஹிந்து சமய அறநிலையத்துறையின், ஒரு கால பூஜை திட்ட கோவில்களில் பணியாற்றும் பூஜாரிகளுக்கு மாத தொகுப்பு ஊதியம், 1,000 ரூபாயை உயர்த்தி, 5,000 ரூபாயாக வழங்க வேண்டும்.
தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில், வரும் மார்ச் 2ல் திருச்சியில் நடைபெறும் மாநில பொதுக்குழு பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பூஜாரிகள் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

