/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் வடிவில் கொலு; மூத்த குடிமக்கள் அசத்தல்
/
கோவில் வடிவில் கொலு; மூத்த குடிமக்கள் அசத்தல்
ADDED : செப் 29, 2025 12:38 AM

ந வராத்திரி விழா என்றதும் முதலில் நினைவுக்கு வருவது கொலு. பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகள், தேவர்கள், தெய்வங்களை வைத்து, தினசரி பூஜை செய்து வழிபடுவதே நவராத்திரி கொலு சிறப்பு.
நவராத்திரியையொட்டி, வீடுகள், பள்ளி, கல்லுாரிகளில் கொலு வைத்துள்ளனர். பச்சாபாளையத்தில் உள்ள, 'கோவை கேர்' என்ற மூத்த குடிமக்களுக்கான குடியிருப்பில், இந்தாண்டு நவராத்திரி விழாவையொட்டி, கோவில் வடிவில் கொலு அமைத்துள்ளனர்.
கோபுரம், தெப்பக்குளம், பூக்கடைகள் அமைத்துள்ளனர். அதோடு, 18 சக்தி பீடங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
கொலு அமைத்த கீதா கூறுகையில், ''குடியிருப்பில், 160 பேர் உள்ளோம். ஆண்டுதோறும் நவராத்திரி கொலு அமைத்து வருகிறோம். 18 சக்தி பீடங்களை மூலக்கருத்தாகக் கொண்டு, கொலு அமைத்துள்ளோம். 4 மாதமாக ஒவ்வொரு பொருட்களாக வாங்கி, 6 பேர் சேர்ந்து உருவாக்கினோம்.
மீதமுள்ளவர்கள், தங்களால் முடிந்த உதவி செய்தனர். கொலுப்படிகளை, கோவில் கோபுரம் வடிவில் அமைத்து, கோயிலில் பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மனை அமைத்துள்ளோம். 18 சக்தி பீடங்களும் அற்புதமாய் அமைந்துள்ளன. மூத்த குடிமக்கள் தினமும் 2 மணி நேரம் பாராயணம், மாலையில் சிறப்பு பூஜை, தொடர்ந்து, கலைநிகழ்ச்சி நடத்தி வருகிறோம்,'' என்றார்.