தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சந்திர கிரகணத்தையொட்டி நாளை பகல் கோயில்களில் நடையடைப்பு

 சந்திர கிரகணத்தையொட்டி நாளை பகல் கோயில்களில் நடையடைப்பு

 சந்திர கிரகணத்தையொட்டி நாளை பகல் கோயில்களில் நடையடைப்பு


ADDED : மார் 02, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டாமுத்தூர்: -: சந்திர கிரகணத்தையொட்டி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மற்றும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், நாளை (3ம் தேதி) பகலில் நடை அடைக்கப்பட உள்ளது.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை பகல், 1:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

அதன்பின் நடை அடைக்கப்பட்டு, நாளை மறுநாள் காலை, 6:00 மணிக்கு, மீண்டும் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பகல் 1:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, இரவு, 7:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கிரகண சாந்தி செய்யப்படும்.

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பகல் 12:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, இரவு 7:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டு கிரகண சாந்தி செய்யப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us