தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கல்லாற்றில் தற்காலிக இபாஸ் சோதனை சாவடி

கல்லாற்றில் தற்காலிக இபாஸ் சோதனை சாவடி

கல்லாற்றில் தற்காலிக இபாஸ் சோதனை சாவடி


ADDED : செப் 29, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்லாறு: கல்லாற்றில் உள்ள இ–பாஸ் சோதனை சாவடிக்கு அருகில், சோதனை முயற்சியாக மற்றொரு தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டள்ளது.

மேட்டுப்பாளையம் கல்லாறு தூரிபாலம் அருகே இ–பாஸ் சோதனை சாவடி உள்ளது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் இதனை நிர்வகிக்கிறது.

இங்கு மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலா வாகனங்களில் இ–பாஸ் உள்ளதா என சோதனை செய்யப்படுகிறது. இந்த சோதனை சாவடியை கல்லாறு கிராமம் அருகே மாற்ற நீலகிரி மாவட்டம் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு கல்லாறு பகுதியில் குடியிருக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அண்மையில் மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் இரு மாவட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் கல்லாறு மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது.

இதில் கல்லாறு கிராம மக்கள், இ–பாஸ் சோதனை சாவடியை இடமாற்றம் செய்ய உள்ள இடத்தில், கல்லாறு பஸ் ஸ்டாப் உள்ளது. விடுமுறை நாட்களில் ஊட்டி செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், அதனால் எப்போதும் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிகாரிகள் தரப்பில் மக்களிடம் பேசுகையில், இ–பாஸ் சோதனை சாவடியை இடமாற்றம் செய்யவில்லை. இ–பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களை முன்கூட்டியே கண்டறிந்து இ–பாஸ் எடுக்க வைப்பதற்காக சோதனை சாவடிக்கு அருகிலேயே மற்றொரு செக் பாயிண்ட் அமைக்க உள்ளோம். எனவே மக்கள் யாரும் இதை தவறாக எண்ணிக் கொள்ள வேண்டாம் என தெரிவித்தனர். மேலும் ஒரு வார காலத்திற்கு சோதனை முயற்சியாக இந்த தற்காலிக செக் பாயின்ட் எனப்படும் சோதனைச் சாவடி முகாமை நடத்த உள்ளோம், என்றனர்.

மக்கள் சமாதானம் அடைந்ததை அடுத்து, நேற்று முதல் இந்த சோதனை சாவடி நடைமுறைக்கு வந்தது. கல்லாறு தூரி பாலத்துக்கு முன்பாகவே, மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில், தற்காலிகமாக சிறிய கூடாரம் அமைத்து சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குன்னூர் வருவாய் துறையினர், வாகனங்களை நிறுத்தி இ–பாஸ் உள்ளதா என சோதனை செய்கின்றனர்.

இல்லாத வாகனங்களை இடது புறத்தில் உள்ள தூரிபாலத்தின் சிறிய சாலை வழியாக, அனுப்பி ஓரமாக வாகனங்களை நிறுத்த அறிவுறுத்துகின்றனர். பின்பு வருவாய் துறையினர் அவர்களுக்கு இ–பாஸ் எடுத்து தந்து அனுப்புகின்றனர். இந்த சோதனை முயற்சி இன்னும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.-

---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us