தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வடவள்ளியில் வேகத்தடை வேண்டும்

வடவள்ளியில் வேகத்தடை வேண்டும்

வடவள்ளியில் வேகத்தடை வேண்டும்


UPDATED : செப் 29, 2026 07:26 PM

ADDED : செப் 29, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 29, 2026 07:26 PM ADDED : செப் 29, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடவள்ளியில் வேகத்தடை தேவை வடவள்ளி -- வீரகேரளம் செல்லும் ரோட்டில் வேகத்தடை இல்லை. அடிக்கடி விபத்து நடக்கிறது. உடனடியாக வேகத்தடை அமைப்பதோடு, அதை குறிக்க அதன் மேல் பெயின்டும் அடிக்க வேண்டும்.

-- குமரேசன்: இருகூரில் கழிவுநீரால் அவதி இருகூர், காமாட்சிபுரம், கம்போடியா மில் காம்பவுண்டு கழிவு நீர் சுத்தம் செய்யாமல் இருக்கிறது. உடனே சுத்தம் செய்ய வேண்டும்.

- - ரங்கசாமி: கே.கே.புதுாரில் இருட்டு கலெக்டர் சிவகுமார் தெருவில் மூன்று தெருவிளக்குகள் ஒரு மாதமாக எரியவில்லை. மாநகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

- - ராமகிருஷ்ணா:

வரதராஜபுரத்தில் தெருவிளக்கு தேவை குட்டி நாயுடு லே அவுட், பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள மின் விளக்கு 15 நாட்களாக எரிவதில்லை.

-பிரபு:

கணேஷ் நகரில் நாய் தொல்லை தினமும் இரவு நாய்கள் தொந்தரவு மிகவும் அதிகமாக உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோரையும் துரத்தி வருகிறது.

-வரதராஜன்:

பாரதி காலனியில் ஆபத்து பீளமேடு பாரதி காலனி, கே.என்.ஆர். லேஅவுட்டில் 35 ஆண்டுகள் பழமையான மின்கம்பம் சேதமடைந்துள்ளது. பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

-- ராணி:

பூம்புகார் நகரில் மோசமான சாலை இடையர்பாளையம் அருகே பூம்புகார் நகரில் சாய் கோவில், பெருமாள் கோவில் செல்லும் சாலையில் தெருவிளக்குகள் இல்லை. மேடு, பள்ளங்களுடன் உள்ள சாலையில் இரவு நேரங்களில் நடந்து செல்ல பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

-மூர்த்தி:

தெலுங்குபாளையத்தில் இருட்டு தெலுங்குபாளையம் தர்மராஜா கோவில் முன்புறம் உள்ள தெருவிளக்கு கடந்த 15 நாட்களாக எரிவதில்லை. இரவு நேரங்களில் அப்பகுதி இருளாக இருப்பதால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

- செந்தில்குமார்:

கோணவாய்க்கால்பாளையத்தில் குப்பை ராகவேந்திரா கார்டன் அருகே சாலையோரத்தில் தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வருகிறது. குப்பையால் வாய்க்காலில் ஆகாயத்தாமரை வளர்ந்து, தண்ணீர் செல்லும் பாதை அடைபடும் நிலை உள்ளது.

-மாரி:

வடகோவையில் துர்நாற்றம் திருவேங்கடம் ரோட்டோரத்தில் மனிதக்கழிவு கொட்டப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. மூன்று நாட்களாக அகற்றப்படாமல் கிடப்பதால், அப்பகுதியில் நடந்து செல்ல முடியவில்லை.

-மீனா:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us