தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தென்னை மரங்களை பாதுகாக்க இப்படி செய்து பாருங்களேன்!

தென்னை மரங்களை பாதுகாக்க இப்படி செய்து பாருங்களேன்!

தென்னை மரங்களை பாதுகாக்க இப்படி செய்து பாருங்களேன்!


ADDED : செப் 29, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வட்டாரத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் தென்னை விவசாயம் பாதிப்பதை தவிர்க்க, வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கிணத்துக்கடவு வட்டாரத்தில் அதிக அளவில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் நடக்கிறது. மழை பொழிவு இல்லாத நிலையில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கடந்த சில நாட்களாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வறட்சி தலைதுாக்க துவங்கியுள்ளதால், விவசாயம் கடுமையாக பாதிக்கிறது.

இப்பகுதியில், 12 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள தென்னை விவசாயம், ஒரு சில பகுதிகளில் காய்ந்து காணப்படுகிறது. இதைத் தவிர்க்க தமிழ்நாடு வேளாண் பல்கலை பேராசிரியர் ஆனந்தராஜா ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவர் கூறியதாவது:

வறட்சி காலத்தில், தென்னைக்கு இயற்கை மூடாக்கு அமைக்க வேண்டும். ரசாயன உரங்கள் இடுவதை முற்றிலும் தவிர்த்து, அதற்கு மாற்றாக மண்புழு உரம், குப்பை மண் உள்ளிட்டவைகளை இடலாம். இதனால் மண்ணில் நீரை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

தென்னைக்கு, அதிகாலை அல்லது இரவு நேரத்தில் தண்ணீர் விட வேண்டும். இதற்கு இடப்பட்ட நேரத்தில் தண்ணீர் பாய்ச்சுதலை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் வறட்சி காலத்திலும் தென்னையை பாதுகாக்கலாம்.

இவ்வாறு, கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us