ADDED : ஜூலை 02, 2025 09:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில், சேதமடைந்துள்ள சாலைகள், தற்காலிகமாக மண் கொட்டி சீரமைக்கப்படுகிறது.
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி குடியிருப்பு பகுதிகளுக்கு ஏற்றாற்போல், சாலை, தெருவிளக்கு, மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், பல பகுதிகளில், சாலை மிகவும் மோசமாக உள்ளது.
குறிப்பாக, குடிநீர் குழாய் உடைப்பு, கசிவு ஏற்படும் போது, தார் சாலை தோண்டப்படுகிறது. இதனால், பல பகுதிகளில், சாலை குண்டும் குழியுமாக மாறி வருகிறது. சில பகுதிகளில், சாலையில் உள்ள கற்கள் பெயர்ந்து குண்டும், குழியு-மாக காட்சியளிப்பதால், மக்கள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக இந்த சாலைகளில் மண் கொட்டி தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது.