/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடையை விஸ்தரிக்க தற்காலிக ெஷட்; அதிகாரிகள் கண்காணிப்பு அவசியம்
/
கடையை விஸ்தரிக்க தற்காலிக ெஷட்; அதிகாரிகள் கண்காணிப்பு அவசியம்
கடையை விஸ்தரிக்க தற்காலிக ெஷட்; அதிகாரிகள் கண்காணிப்பு அவசியம்
கடையை விஸ்தரிக்க தற்காலிக ெஷட்; அதிகாரிகள் கண்காணிப்பு அவசியம்
ADDED : ஜூலை 07, 2025 11:02 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், ரோட்டோரத்தில், பகலில் கடையை விரிக்கும் சிலர், அதனை தற்காலிக ெஷட் அமைத்து, ஆக்கிரமிப்பு செய்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.
பொள்ளாச்சி நகரப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, தற்போது தீராத தலைவலியாக போக்குவரத்து நெரிசல் பிரச்னை உள்ளது.
அதிலும், நியூஸ்கீம் ரோடு, கடை வீதி, ராஜாமில்ரோடு, சத்திரம் வீதி, மார்க்கெட் ரோடு போன்ற பகுதிகளில் வணிக வளாகங்களுக்கு செல்பவர்கள் வாகனங்களை நிறுத்த 'பார்க்கிங்' வசதியில்லாததால், ரோட்டிலேயே நிறுத்திச்செல்கின்றனர்.
நெரிசலால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். இதனிடையே மாலையில் அமைக்கப்படும் ரோட்டோர கடைகள் காரணமாகவும் நெரிசல் அதிகரிக்கிறது. சிலர், அப்பகுதியை ஆக்கிரமிப்பும் செய்யும் வகையில், தற்காலிக ெஷட் அமைத்தும், கடைகளை விரிவுபடுத்துகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பெரும்பாலான வணிக கடைக்காரர்கள், தங்களது விற்பனையை மட்டுமே கருத்தில் கொண்டு, சாலை வரை கடைகளை விரிவாக்கம் செய்கின்றனர்.
நடைபாதையை ஆக்கிரமித்தும், ரோட்டை ஒட்டியும் விற்பனைப் பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர். இதுஒருபுறமிருக்க, சிலர், குறிப்பிட்ட பொருட்களைக் கொண்டு வந்து, பகலில் மட்டுமே ரோட்டோரத்தில் கடை அமைந்து வந்தனர்.
அவர்கள், மெல்ல மெல்ல, அதே பகுதியில் தற்காலிக ெஷட் அமைத்தும், ரோட்டை ஆக்கிரமிப்பதால் நெரிசல் அதிகரிக்கிறது. துறை ரீதியான அதிகாரிகள், அவ்வப்போது ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.