/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்தாண்டு கடந்தாச்சு; பணி நிரந்தரம் என்னாச்சு? கோர்ட் உத்தரவை செயல்படுத்தாத அரசுக்கு கேள்வி

ADDED : ஆக 25, 2025 09:28 PM

- நமது நிருபர் -
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், 10 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்ட, 4,000 செவிலியர்கள், இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
தமிழகத்தில் மருத்துவ பணிகள் தேர்வாணையம் (எம்.ஆர்.பி.,) வாயிலாக, 2015ல், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, 12,000 செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். 'இரு ஆண்டுகள் தொகுப்பூதிய காலத்துக்கு பின், காலமுறை ஊதியத்தில் நிரந்தரம் செய்யப்படுவர்' என தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு கட்டமாக, தற்போது வரை, 8,000 பேர் காலமுறை ஊதியத்துக்கு மாற்றப்பட்டனர். 4,000 பேர் இன்னமும் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர்.
தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்க பொதுச்செயலாளர் சுபின் கூறியதாவது: தொகுப்பூதிய பணியாளர்களுக்கும், நிரந்தர பணியாளர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என, நீதிமன்றத்தை அணுகினோம். 2018ல் சாதகமான தீர்ப்பு கிடைத்தது. பல்வேறு கமிட்டிகள் அமைத்து தமிழக அரசு காலம் தாழ்த்தியது. மீண்டும் நீதிமன்றம் சென்றோம்.
ஓய்வு பெற்ற இரு நீதிபதிகள் கொண்ட குழு அமைத்து, அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து, நிரந்தர பணியில் உள்ளவர்களும், தொகுப்பூதிய செவிலியர்களும் ஒரே மாதிரியான வேலை தான் பார்க்கின்றனர் என்பதை உறுதி செய்து அறிக்கை அளித்தது. அதன் பிறகும் அரசு கண்டுகொள்ளவில்லை.
தேர்தல் வாக்குறுதியில் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என சொன்னார்களே தவிர, கோர்ட் உத்தரவை தி.மு.க. அரசு இதுவரை கண்டுகொள்ளவே இல்லை. இவ்வாறு, சுபின் கூறினார்.