/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை எடுக்க தனியாருக்கு வழங்கிய டெண்டர் ரத்து
/
குப்பை எடுக்க தனியாருக்கு வழங்கிய டெண்டர் ரத்து
ADDED : டிச 28, 2024 12:16 AM
மேட்டுப்பாளையம்; குப்பை எடுக்க தனியாருக்கு வழங்கிய டெண்டர் ரத்துசெய்து மன்ற கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேட்டுப்பாளையம் நகராட்சியில், நகர மன்ற சாதாரண கூட்டம், தலைவர் மெஹரிபா பர்வீன் தலைமையில் நடந்தது. கமிஷனர் அமுதா, துணைத் தலைவர் அருள்வடிவு, பொறியாளர் ராமசாமி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் நகரில் ஒவ்வொரு வார்டுகளிலும், குப்பைகளை சரியாக சுத்தம் செய்யாததால் தேங்கியுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் உள்ளது என, பேசினர். இதை அடுத்து நகரில் குப்பைகளை எடுக்க தனியாருக்கு விட்டிருந்த டெண்டரை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றினர். நகராட்சி நந்தவனத்தை மேலும், மூன்றாண்டுகளுக்கு அனைத்து ஹிந்து சமுதாய சங்கத்தினர் நடத்துவதற்கு, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மொத்தம் 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.