/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகள் 29ல் துவக்கம்
/
டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகள் 29ல் துவக்கம்
ADDED : மார் 26, 2025 10:16 PM
மேட்டுப்பாளையம்:
மாவட்ட அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகள் வருகிற, 29, 30 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற உள்ளன.
கோவை மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகம், சூர்யா மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அன்பு ஆம்புலன்ஸ், நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை இணைந்து, மாவட்ட மற்றும் மாநில அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகளை நடத்த உள்ளன. மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில், 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவகளுக்கான மாவட்ட அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகள், வருகிற, 29, 30 ஆகிய இரண்டு தினங்களில், லீக் முறையில் நடைபெறும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வீரர்கள், மாநில அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெறுவர்.
தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகமும், கோவை மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகமும் இணைந்து, 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகள், மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில், ஏப்., 5, 6 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற உள்ளன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும், விளையாட்டு வீரர்கள், வீராங்கணைகள், இப்போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
எனவே போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள், 06.08.2007 க்கு பின் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். இறுதிப் போட்டி, ஏப்.6ம் தேதி நடைபெறும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வீரர்கள், மே மாதம் நடைபெற உள்ள, தேசிய அளவிலான போட்டிகளில், பங்கேற்பர்.
இத்தகவலை கோவை மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகத் தலைவர் டாக்டர் சுதாகர் தெரிவித்தார்.