/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருவத்தேர்வு முடிவுகள் வெளியீடு
/
பருவத்தேர்வு முடிவுகள் வெளியீடு
ADDED : மே 23, 2025 11:50 PM
கோவை : கோவை அரசு கலை கல்லுாரியின், 2024-25 ஏப்.,/ மே மாத பருவத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் பதிவெண்களை பயன்படுத்தி முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
இதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத்தேர்வு, ஜூன் 12ம் தேதி நடைபெறவுள்ளது. இளநிலை பிரிவில் ஆறாம் பருவத்தில் ஒரு பாடத்திலும், முதுநிலை பிரிவில் நான்காம் பருவத்தில் ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியுற்ற மாணவர்கள் இத்துணைத்தேர்வில் பங்கேற்கலாம்.
துணைத்தேர்வுக்கான விண்ணப்பங்களையும், விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கான விண்ணப்பத்தையும் இணையதளத்தில் (https://gacbe.ac.in/) பதிவிறக்கம் செய்யலாம். அல்லது, கல்லுாரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஜூன் 6ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செல்வராஜ் தெரிவித்தார்.