/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருக்குறள் எழுதிய மாணவிகளுக்கு சான்று
/
திருக்குறள் எழுதிய மாணவிகளுக்கு சான்று
ADDED : ஜன 23, 2025 11:34 PM
ஆனைமலை, ; 'சுய ஒழுக்கம் பின்பற்றி வாழ்ந்தால் சிறந்த மனிதராக உயர முடியும்,' என, தமிழ் முக்கூடல் விழாவில் தெரிவிக்கப்பட்டது.
ஆனைமலை வி.ஆர்.டி., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ் முக்கூடல் விழா மற்றும் படிகள் படிப்பகம் வாயிலாக திருக்குறள் ஆர்வலர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் சுமதி தலைமை வகித்தார். முன்னதாக ஆசிரியர் மகாலட்சுமி, வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக, வேதாத்திரி மகரிஷி வாழ்க வளமுடன் அமைப்பு மண்டல தலைவர் ஆறுச்சாமி கலந்து கொண்டு பேசுகையில், ''சுய ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம். அதை பின்பற்றி தன்னையே நம்பி வாழ்ந்தால், சிறந்த மனிதராக உயர முடியும்,'' என்றார்.
பேச்சாளர் சுடர்விழி, திருக்குறள் பயன்பாடுகள் குறித்து பேசினார். படிகள் படிப்பக பதிப்பாளர் பூங்கொடி, 1,330 குறள்கள் எழுதிய 41 மாணவியருக்கு சான்றிழ், கல்வி உபகரணங்கள், அகராதி போன்ற பரிசுகளை வழங்கினார். ஆசிரியர் ஜெயக்குமார், உதவி தலைமையாசிரியர் விமலாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

