/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டெட் வினாக்கள் ரொம்ப 'ஈசி' தேர்வர்கள் கருத்து
/
டெட் வினாக்கள் ரொம்ப 'ஈசி' தேர்வர்கள் கருத்து
ADDED : நவ 17, 2025 01:51 AM

கோவை: ஆசிரியர் தகுதி தேர்வான டெட் இரண்டாம் தாள் தேர்வு, நேற்று நடைபெற்றது. இத்தேர்வுக்கு கோவை மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களில், 1,525 பேர் தேர்வுக்கு வரவில்லை. வினாத் தாள் எளிதாக இருந்ததாக, தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.
பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் டெட் தேர்வு எழுத வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள், மேலும் 2011க்கு முன் நியமனம் பெற்ற ஆசிரியர்களும் இத்தேர்வில் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் 45 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. 12,370 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 145 மாற்றுத் திறனாளிகள் உட்பட 10,845 பேர் தேர்வு எழுதினர். 1,525 பேர் பங்கேற்கவில்லை. முந்தைய ஆண்டுகளின் தேர்வுகளை ஒப்பிடுகையில், இந்த முறை கேள்விகள் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.

