தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளிகளுக்கு கிளம்பிய பாடப்புத்தகங்கள்

 பள்ளிகளுக்கு கிளம்பிய பாடப்புத்தகங்கள்

 பள்ளிகளுக்கு கிளம்பிய பாடப்புத்தகங்கள்


ADDED : ஏப் 27, 2026 09:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 09:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: தமிழ்நாடு பாடநுால் கழகம் சார்பில் 2026-27ம் கல்வியாண்டுக்கு, 4 கோடிக்கும் அதிகமான பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன. மாவட்டங்களுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி, 99 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

கோவை மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான புத்தகங்கள் ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில், பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும். இதற்கேற்ப மே மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் முழுமையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us