/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்திய நிதியமைச்சருடன் ஜவுளி குழுவினர் சந்திப்பு
/
மத்திய நிதியமைச்சருடன் ஜவுளி குழுவினர் சந்திப்பு
ADDED : ஆக 22, 2025 08:12 AM

கோவை; பருத்தி இறக்குமதி மீதான வரி ரத்து செய்யப்பட்டதற்காக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, கோவை ஜவுளிக்குழுவினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (டெக்ஸ்புரோசில்) துணைத் தலைவர் ரவிசாம் அறிக்கை:
இந்திய ஜவுளித் தொழில், விவசாயிகள் இருதரப்பினரும் பயனடையும் வகையில், பருத்தி பற்றாக்குறையை சமாளிக்க, பருத்தி விளைச்சல் அல்லாத ஏப். - செப். காலகட்டத்தில், 11 சதவீத இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்க தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்று, செப். 30 வரை வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை தெற்கு எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தலைமையில், தொழில்துறை குழு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டில்லியில் சந்தித்து நன்றி தெரிவித்தது. அப்போது, வரும் செப். 30 வரை, 'பில்ஸ் ஆப் லேடிங்' அனுமதிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
'அமெரிக்காவின் வரிவிதிப்புகளால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழில்துறையின் கோரிக்கைகள் கவனமாக பரிசீலிக்கப்படுகின்றன' என, நிதியமைச்சர் உறுதியளித்தார்.
அசல் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான 2 ஆண்டு கால அவகாசத்தை நீட்டித்தல்; அவசர கால கடன் வரம்பு உத்தரவாத திட்டத்தின் கீழ், 30 சதவீத பிணையில்லா கடனை, 5 சதவீத மானியத்துடன் நீட்டித்தல்; ஏற்றுமதி செய்யும்போது விதிக்கும் வரியை திரும்பப் பெறும் திட்டம் (ஆர்.ஓ.டி.டி.இ.பி.,) மற்றும் ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல் சலுகைகளை மேலும் 5 ஆண்டுகள் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.