/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தை அமாவாசை வழிபாடு; ஆனைமலைக்கு சிறப்பு பஸ்
/
தை அமாவாசை வழிபாடு; ஆனைமலைக்கு சிறப்பு பஸ்
ADDED : ஜன 28, 2025 11:08 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் இருந்து, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, தை மாத அமாவாசையை முன்னிட்டு, 15 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில், பிரசித்திபெற்ற மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை வழிபாடு மாதம் தோறும் நடக்கிறது. மாசி மற்றும் தை மாத அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடத்தப்படுகிறது. அவ்வகையில், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து, அமாவாசை வழிபாட்டுக்கு, பக்தர்கள் அதிகளவில் வருகை புரிவர். இன்று தை மாத அமாவாசை என்பதால், மாசாணியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வசதிக்காக, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக, 15 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நேற்று மாலை முதல், விடிய விடிய சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்காக, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் மற்றும் மாசாணியம்மன் கோவிலில், சிறப்பு இயக்க முழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் கூட்டத்துக்கு ஏற்ப, பஸ்களை இயக்க, டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை அறிவுறுத்தி வருகின்றனர்.