/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஞான தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச விழா
/
ஞான தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச விழா
ADDED : ஜன 24, 2024 11:57 PM
உடுமலை : உடுமலை கோவில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
மாநிலத்திலுள்ள முருகன் கோவில்களில் தைப்பூச விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, மடத்துக்குளம் அருகே பாப்பான்குளம் ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூச பால் காவடித்திருவிழா, பாலாபிேஷக பெருவிழா நடக்கிறது.
இவ்விழாவில், இன்று (25ம் தேதி) காலை, 7:30 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் துவங்குகிறது. காலை, 10:30 மணிக்கு பால் காவடி புறப்பாடு, வீதி வலம் வருதல், 10:45 மணிக்கு ஞான தண்டாயுதபாணி சுவாமிக்கு பால் அபிேஷகமும், பகல் 12:00 மணிக்கு வெள்ளிக்கவச அலங்காரம், பகல், 12:30 மணிக்கு துாப, தீப நைவேத்யம், மகா தீபாராதனை, மகா அன்னதானமும் நடக்கிறது.
இதில், பாப்பான்குளம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை, பாப்பான்குளம் ஞான தண்டாயுதபாணி நற்பணி மன்றம் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலிலும், இன்று காலை, தைப்பூசத்தையொட்டி, சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெறுகிறது.