/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலை கோவிலில் இன்று தைப்பூச திருவிழா கொடியேற்றம்
/
மருதமலை கோவிலில் இன்று தைப்பூச திருவிழா கொடியேற்றம்
மருதமலை கோவிலில் இன்று தைப்பூச திருவிழா கொடியேற்றம்
மருதமலை கோவிலில் இன்று தைப்பூச திருவிழா கொடியேற்றம்
ADDED : ஜன 19, 2024 04:30 AM
வடவள்ளி : மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூச தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம், கந்த சஷ்டி விழா, தைப்பூச தேர்த்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, தொடர்ந்து பத்து நாட்கள் கொண்டாடப்படும் தைப்பூச தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இன்று காலை, 7:00 மணி முதல் 8:00 மணிக்குள், மங்கள வாத்தியங்கள் முழக்க, கொடிக்கம்பத்தில், மகர லக்னத்தில் சேவல் உருவம் பொறிக்கப்பட்டுள்ள கொடி ஏற்றப்பட உள்ளது. தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வரும், 24ம் தேதி, திருக்கல்யாண உற்சவமும், 25ம் தேதி, தேர் வடம் பிடித்தலும் வெகுவிமர்சையாக நடக்க உள்ளது.