/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் இன்று தைப்பூச விழா துவக்கம்
/
குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் இன்று தைப்பூச விழா துவக்கம்
குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் இன்று தைப்பூச விழா துவக்கம்
குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் இன்று தைப்பூச விழா துவக்கம்
ADDED : பிப் 04, 2025 11:58 PM
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கிராம சாந்தி நடந்தது. இன்று ஐந்தாம் தேதி காலை யாகசாலை வேள்வி பூஜை, அதைத் தொடர்ந்து, 11:30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. 8ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் காலை, மாலை முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடக்க உள்ளன.
வரும் 9ம் தேதி காலை, 8:00 மணிக்கு தேருக்கு மகுடம் ஏற்றுதலும், இரவு 9:00 மணிக்கு வள்ளி மலையில் இருந்து, அம்மன் அழைப்பும் நடக்க உள்ளன. வரும் 19ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவம், இரவு யானை வாகனத்தில் திருவீதி உலா நடக்க உள்ளது. 11ம் தேதி மாலை வள்ளி, தெய்வானை சமேதராக குழந்தை வேலாயுதசுவாமி, தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 5:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
12ம் தேதி அபிஷேக பூஜையும், இரவு பரிவேட்டையும், 13ம் தேதி ஆறுமுக காவடி செலுத்தும் வைபவமும் நடைபெற உள்ளன. அன்று மாலை தெப்பத் திருவிழாவும், மயில் வாகன உற்சவமும் நடக்கின்றன. வரும் 14ம் தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.