/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குமரன் குன்று கோயிலில் தைப்பூச கொடியேற்றம்
/
குமரன் குன்று கோயிலில் தைப்பூச கொடியேற்றம்
ADDED : ஜன 27, 2026 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்: குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூச தேர்த் திருவிழாவில் நேற்று கொடியேற்றம் நடந்தது.
பிரசித்தி பெற்ற குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசுவாமி கோயிலில், தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பலிபீட பூஜை மற்றும் கலச பூஜை நடந்தது.
நேற்று அதிகாலையில் வேள்வி பூஜை நடந்தது. காலை 6:40 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. காலை 11:00 மணிக்கு, வள்ளி தெய்வானை சமேதரராக, கல்யாண சுப்பிரமணியசாமி கிரிவலம் வந்து அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.
அறங்காவலர் குழு தலைவர் செல்வகுமார், அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள் என 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

