தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மருதமலையில் தைப்பூச திருக்கல்யாண உற்சவம்

மருதமலையில் தைப்பூச திருக்கல்யாண உற்சவம்

மருதமலையில் தைப்பூச திருக்கல்யாண உற்சவம்


ADDED : பிப் 01, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடவள்ளி : மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் கோலாகலமாக நடந்தது.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா, கடந்த மாதம் 26ம் தேதி கொடி

யேற்றத்துடன் துவங்கியது.காலையும், மாலையும் யாகசாலை பூஜை மற்றும் திருவீதி உலா நடந்தது.

பத்து நாள் தைப்பூச திருவிழாவின், ஆறாம் நாளான நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 16 வகையான திரவி

யங்கள் கொண்டு, மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்தார்.

பகல் 12:30 முதல் 1:00 மணி வரை, தைப்பூச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், விநாயகர் பூஜை, கங்கணம் கட்டுதல், கலச பூஜை, பட்டு வஸ்திரம் சாத்துதல், தாரை வார்த்து கொடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

பகல் 12:45 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானை சமேத

ராய், கண்ணாடி மஞ்சத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருக்கல்யாண மொய்ப்பணமாக, 75,719 ரூபாய் வசூலானது. திருக்கல்யாண உற்சவத்தில், கோவில் தக்கார் ஜெயகுமார், கோவில் துணை கமிஷனர் செந்தில்குமார் மற்றும் பக்தர்கள் பலர் பங்கேற்றார். தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தேர் வடம் பிடித்தல், இன்று மாலை, 3:00 மணிக்கு நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us