ADDED : அக் 03, 2025 09:43 PM

பெ.நா.பாளையம்: பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப் பள்ளியில், 56வது ஆண்டு விழா நடந்தது.
விழாவில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்று, ஆண்டு அறிக்கை வாசித்தார். பள்ளியின் செயலாளர் பிரீத்தா பிரியதர்ஷினி பங்கேற்று, விழா சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக கோவை எம்.பி., கணபதி ராஜ்குமார் பங்கேற்றார். சக்தி நிறுவன குழுமங்களின் இயக்குனர் ராஜ்குமார், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, தனிமனித ஒழுக்கம், தொழில்நுட்பம், தனி திறன்கள், கல்வி கற்க அரசு வழங்கும் சலுகைகள் ஆகியவற்றை எடுத்து கூறினார்.
மேலும், கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து, மாணவர்களின் நாடகம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
பள்ளியின் நிர்வாகத்தினர், உறுப்பினர்கள், கல்வி இயக்குனர் குணசேகர், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் மாடசாமி நன்றி கூறினார்.