/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமஷ்டி பள்ளியில் 'நதிகளுக்கு நன்றி'
/
சமஷ்டி பள்ளியில் 'நதிகளுக்கு நன்றி'
ADDED : ஜன 28, 2025 07:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : சமஷ்டி சர்வதேச பள்ளியில், ஆண்டு விழா நடந்தது. இதில், 'நதிகளுக்கு நன்றி' என்ற தலைப்பில் மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்வுகளில் பங்கேற்று அசத்தினர்.
இதில், கங்கா, காவேரி, கோதாவரி, சிந்து, நர்மதா ஆகிய நதிகள் நீதிமன்றத்தில் முறையிடுவது போன்று நடனம் கலந்த நாடக நிகழ்வு, பார்வையாளர்களை சிந்திக்க வைத்தது.
தொடர்ந்து, விளையாட்டு, கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், பள்ளி நிர்வாக இயக்குனர் சுவேதா மந்தேனா, இயக்குனர்கள் மீரா பண்டாரி அரோரா, மேஜர் நவீன் மேத்தா, முதல்வர் தீபாதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

