/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேரு சர்வதேச பள்ளி சார்பில் 'தராங் 2024' ஆண்டு விழா
/
நேரு சர்வதேச பள்ளி சார்பில் 'தராங் 2024' ஆண்டு விழா
நேரு சர்வதேச பள்ளி சார்பில் 'தராங் 2024' ஆண்டு விழா
நேரு சர்வதேச பள்ளி சார்பில் 'தராங் 2024' ஆண்டு விழா
ADDED : பிப் 07, 2024 01:34 AM

கோவை;நேரு சர்வதேச பள்ளியின், இரண்டாம் ஆண்டு விழா, 'தராங் - 2024' என்ற தலைப்பில், பி.கே.தாஸ் கலையரங்கத்தில் கோலாகலமாக நடந்தது.
நேரு கல்வி குழுமங்களின் நிர்வாக தலைவர் கிருஷ்ணதாஸ், முதன்மை நிர்வாக அதிகாரி கிருஷ்ண குமார் தலைமை வகித்தனர். முன்னாள் நீதிபதி முஹமது ஜியாபூதீன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல்வர் சிவபிரகாஷ், பள்ளியின் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.
கல்வி, விளையாட்டு, கலை போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பன்முக ஆற்றலை வெளிப்படுத்தி, பல்வேறு கலை நிகழ்ச்சிகளை, மாணவர்கள் அரங்கேற்றினர்.
நேரு கிட்ஸ் அகாடமி மற்றும் நேரு சர்வதேச பள்ளியின் தாளாளர் சைதன்யா, நேரு கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குனர் நாகராஜா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.