/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அந்த தாயின் கதறல் உறங்கவிடவில்லை'
/
'அந்த தாயின் கதறல் உறங்கவிடவில்லை'
ADDED : ஜூலை 27, 2025 02:49 AM

இ ன்றைய தமிழகத்தில், அருகாமையில் உள்ள கடைக்கு கூட, பிள்ளைகளை அனுப்ப அச்சப்படும் பெற்றோரே அதிகம். அதுவும், பெண் பிள்ளைகளை பெற்ற தாய்மார்களுக்கு, உளவியல் ரீதியாகவே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது, சமீபமாக குழந்தைகள்மீது தொடரும் பாலியல் வன்கொடுமைகள். இது போன்ற சம்பவங்கள் குறத்து, தாய்மார்கள் சிலரிடம் பேசினோம்...
'உறங்க விடாத தாயின் கதறல்' எனக்கு இரண்டும் ஆண் பிள்ளைகள். தற்போது நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது, நல்ல வேளை பெண் குழந்தைகள் பிறக்கவில்லை என்று தோன்றுகிறது. சமீபத்தில் திருவள்ளூர் பகுதியில் சிறுமிக்கு நடந்த கொடூரம், அந்த தாயின் கதறல் இரண்டு நாட்களாக உறங்கவிடவில்லை. உடனுக்குடன் தண்டனை கொடுத்தால் மட்டுமே இதுபோன்ற மிருகங்கள் அடங்கும். - கீதா இல்லத்தரசி
'உளவியல் ரீதியாக பாதிப்பு' சமூகம் எங்கு செல்கிறது எனத் தெரியவில்லை. பள்ளி, கோவில், மருத்துவமனை, என அனைத்து இடங்களிலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. பிள்ளைகளை யாரை நம்பி அனுப்புவது என தெரியவில்லை. என்னை போன்ற பல தாய்மார்கள் பெண் பிள்ளைகளை, வீட்டை விட்டு அனுப்புவதே இல்லை. இதுபோன்ற சம்பவங்களால், தாய்மார்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. - உஷாராணி இல்லத்தரசி
பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு 'குட் டச்', 'பேட் டச்' சொல்லித்தருகின்றோம். ஆனால் கடத்திச் சென்று அடித்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் போது. குழந்தைகள் என்ன செய்ய இயலும். உடனடியாக நிறைவேற்றப்படும், கடுமையான தண்டனை வேண்டும். அதற்கான சட்டங்கள் மட்டுமே தீர்வை ஏற்படுத்தும். - சகுந்தலா ஆசிரியர்
எனக்கு இரண்டும் ஆண் பிள்ளைகள். நல்ல வேளை பெண் குழந்தைகள் பிறக்கவில்லை என்று தோன்றுகிறது. சமீபத்தில் திருவள்ளூர் பகுதியில் சிறுமிக்கு நடந்த கொடூரம், அந்த தாயின் கதறல் இரண்டு நாட்களாக உறங்கவிடவில்லை. உடனுக்குடன் தண்டனை கொடுத்தால் மட்டுமே இதுபோன்ற மிருகங்கள் அடங்கும். - கீதா இல்லத்தரசி
பள்ளி, கோவில், மருத்துவமனை, என அனைத்து இடங்களிலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. பிள்ளைகளை யாரை நம்பி அனுப்புவது என தெரியவில்லை. என்னை போன்ற பல தாய்மார்கள் பெண் பிள்ளைகளை, வீட்டை விட்டு அனுப்புவதே இல்லை. இதுபோன்ற சம்பவங்களால், தாய்மார்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. - உஷாராணி இல்லத்தரசி