தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஜூலை 17 ல் துவங்குகிறது 10வது புத்தக கண்காட்சி

ஜூலை 17 ல் துவங்குகிறது 10வது புத்தக கண்காட்சி

ஜூலை 17 ல் துவங்குகிறது 10வது புத்தக கண்காட்சி


UPDATED : ஜூலை 15, 2026 05:26 PM

ADDED : ஜூலை 15, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2026 05:26 PM ADDED : ஜூலை 15, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கொடிசியா சார்பில் 10வது புத்தக கண்காட்சி ஜூலை 17 ல் துவங்குகிறது; 26ம் தேதி நிறைவடைகிறது.

புத்தக கண்காட்சி தலைவர் ராஜேஷ் கூறியதாவது:

கொடிசியாவின் மூன்று அரங்குகளில், 400 ஸ்டால்களில், 200 பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர். கடந்தாண்டு புத்தக கண்காட்சிக்கு, 1.5 லட்சம் வாசகர்கள் வந்தனர். இந்தாண்டு கூடுதல் வாசகர்களை எதிர்பார்க்கிறோம்.

கண்காட்சி நடக்கும் 10 நாட்களும், நுால் வெளியீடு, கருத்தரங்கம், இலக்கிய சொற்பொழிவு, பட்டிமன்றம், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முதல் நாள் எழுத்தாளர் மற்றும் பறவை ஆய்வாளர் ரத்தினத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, கவிஞர் ஆனந்தபிரபுவுக்கு கவிதை விருது, எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்திக்கு புனைவு விருது வழங்கப்படுகிறது. டாக்டர் மந்திரிகுமாருக்கு பாராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.

வாசகர்கள் வந்து செல்ல அவிநாசி ரோட்டிலிருந்து, கொடிசியா வரை இலவச வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கும் கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us