/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சின்மயா வித்யாலயா பள்ளியின் 23வது ஆண்டு விழா உற்சாகம்
/
சின்மயா வித்யாலயா பள்ளியின் 23வது ஆண்டு விழா உற்சாகம்
சின்மயா வித்யாலயா பள்ளியின் 23வது ஆண்டு விழா உற்சாகம்
சின்மயா வித்யாலயா பள்ளியின் 23வது ஆண்டு விழா உற்சாகம்
ADDED : பிப் 08, 2025 05:56 AM

கோவை; ஆர்.எஸ்.புரம், சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் 23வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக, மாருதி உடற்கல்வியியல் கல்லுாரியின் முதல்வரும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் முதல்வருமான ஜெயபால் பங்கேற்று, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி போட்டியைத் துவங்கி வைத்தார். மாணவர்கள் பல்வேறு போட்டிகளில், தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்களின் பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கும், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. சுவாமி சம்பிரதிஷ்டானந்தா அம்மா, சுவாமி விக்னேஷ் சைதன்யா, பள்ளியின் தாளாளர் வேணுகோபால், முதல்வர் ஜெயலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.