/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிடித்தம் செய்த தொகையை வழங்க வேண்டும்
/
பிடித்தம் செய்த தொகையை வழங்க வேண்டும்
ADDED : அக் 12, 2025 11:07 PM
மேட்டுப்பாளையம்:காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், 17 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்வதற்கு, நூற்றுக்கு மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளை செய்து வருகின்றனர். பணிகள் செய்ய ஒதுக்கீடு செய்த தொகையிலிருந்து, ஒரு குறிப்பிட்ட தொகையை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பிடித்தம் செய்துள்ளது. இந்த தொகையை பணிகள் செய்து முடித்த பின், அதிகாரிகள் பணிகளை ஆய்வு செய்த பிறகு, ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும். ஆனால் கடந்த பல மாதங்களாக இந்த தொகை வழங்கப்படாமல் உள்ளது.
இது குறித்து காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தினர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஊராட்சிகளில் செய்யும் வேலைகளின் ரூபாயின் மதிப்பில், ஒரு குறிப்பிட்ட தொகையை, நிர்வாகம் முன் வைப்பு தொகை இ.எம்.டி., மற்றும் சிங்கிள் நோடல் அக்கவுன்ட்ஸ் (எஸ்.என்.ஏ.) வாயிலாக பிடித்தம் செய்வது வழக்கம்.
தீபாவளிக்கு ஒரு மாதம் முன், பிடித்தம் செய்த தொகை ஒப்பந்ததாரர்களுக்கு முழுமையாக வழங்கப்படும். வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, தீபாவளி போனஸ் இந்தத் தொகையிலிருந்து வழங்கப்படும். ஆனால் தீபாவளிக்கு இன்னும், சில நாட்களே உள்ள நிலையில், ஒன்றிய அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுக்கு, பிடித்தம் செய்த தொகையை வழங்காமல் காலம் கடத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக உதவி கலெக்டர், காரமடை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். எனவே பிடித்தம் செய்த தொகையை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.