/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்ட் சுற்றுப்பகுதி சுகாதாரமில்லை: மக்கள் அதிருப்தி
/
பஸ் ஸ்டாண்ட் சுற்றுப்பகுதி சுகாதாரமில்லை: மக்கள் அதிருப்தி
பஸ் ஸ்டாண்ட் சுற்றுப்பகுதி சுகாதாரமில்லை: மக்கள் அதிருப்தி
பஸ் ஸ்டாண்ட் சுற்றுப்பகுதி சுகாதாரமில்லை: மக்கள் அதிருப்தி
ADDED : ஜன 24, 2025 09:58 PM

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்ட் சுற்றுப்புறத்தில் தூய்மையை கடைபிடிக்கததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டிற்கு மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டை சுற்றிலும், கால்நடை மருத்துவமனை, தினசரி காய்கள் மார்க்கெட் அமைந்துள்ளது.
இதில், பஸ் ஸ்டாண்டிலிருந்து பெரியார் நகர் செல்லும் வழித்தடத்தில், அதிகளவு சிகரெட், புகையிலைப் பொருள் பாக்கெட், காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு இருப்பதால், அவ்வழியில் செல்பவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பஸ் ஸ்டாண்ட் அருகே குடிநீர் குழாய் வால்வு உள்ளது. இதிலிருந்து வெளியேறும் உபரி நீரை சேமிக்க தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. இதில், தற்போது காய்ந்த மரத் துண்டுகள், இலைகள், மது பாட்டில்கள் கிடப்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது.
பஸ் ஸ்டாண்ட் கழிவறை அருகே சுகாதாரமின்றி துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கால்நடை மருத்துவமனை சுற்றுச்சுவர் ஒரு பகுதி, பஸ் ஸ்டாண்ட் அருகே இடிக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக மர்ம நபர்கள் சென்று, மது குடிக்கின்றனர். காலி மது பாட்டில் வீசிச்சென்றுள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'பஸ் ஸ்டாண்ட்டை மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பஸ் ஸ்டாண்ட் சுற்றுப்பகுதியில் உள்ள பொதுஇடங்களில் சிலர் மது அருந்துகின்றனர். இதை, கிணத்துக்கடவு போலீசார் கண்காணித்து தடுக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட் வரும் பள்ளி குழந்தைகள் பாதிக்கின்றனர். எனவே, இப்பகுதியை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மைப்படுத்தி, ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்,' என்றனர்.

