/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கறிவேப்பிலையின் நறுமணம் பாதிக்கலாம்'
/
'கறிவேப்பிலையின் நறுமணம் பாதிக்கலாம்'
ADDED : பிப் 01, 2025 02:03 AM
கோவை; கோவை, வேளாண் கால நிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாளை மாலை வரை வறண்ட வானிலையே நில வும். காற்றின் வேகம் மணிக்கு 8 கி.மீ., முதல் 15 கி.மீ., வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்பதால், கறிவேப்பிலையின் நறுமணம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே,விவசாயிகள் மாலை நேரங்களில் நீர்ப்பாய்ச்சுவது நல்லது. அல்லது தெளிப்பு நீர் பாசனத்தைப் பயன்படுத்தலாம்.வாழையில் சருகு நோய் ஏற்பட வாய்ப்பிருப்பதால், நிலத்தை சற்று வறட்சியாக வைத்துக் கொள்ளவும். சருகு நோய் பாதித்த இலைகளை அகற்றி தீ வைத்து எரிக்கவும். பைராகுளோஸ்ட்ரோபின் மருந்தை தெளிக்கவும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.