/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிய நகை கண்காட்சி பார்வைக்கு விருந்து
/
ஆசிய நகை கண்காட்சி பார்வைக்கு விருந்து
ADDED : ஜன 20, 2024 02:22 AM

கோவை;கோவை ரேஸ்கோர்ஸ் சாலையிலுள்ள, தாஜ் விவாந்தா ஓட்டலில், ஆசிய நகை கண்காட்சி நேற்று துவங்கியது.
கியா நகை நிறுவனம் சார்பில், ராமாயண வரலாற்றை பறைசாற்றும் விதமாக, 'பெண்டன்ட்' காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. வரும் 21ம் தேதி வரை காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. மும்பை, டில்லி, பெங்களூரு, சென்னை, கோவை ஆகிய பல்வேறு பகுதிகளை சேர்ந்த நகை தயாரிப்பு நிறுவனங்கள், கைவினை கலைஞர்களின் பிரத்யேக வடிவமைப்புடன் கூடிய தங்க, வைர, பிளாட்டினம், ஜடாவு, குந்தன், போல்கி, வெள்ளி நகைகள் நுட்பமான வேலைப்பாடுகளுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கண்காட்சியை, கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் செயலர் வாசுகி தலைமை வகித்து துவக்கி வைத்தார். நேரு கல்வி குழுமத்தின் இயக்குனர் முரளிதரன், கண்காட்சி ஏற்பாட்டாளர் ஹரீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
கோவை தாஜ் விவாந்தா ஓட்டலில், ஆசிய நகை கண்காட்சி நேற்று துவங்கியது.