தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தாவரவியல் பூங்காவில் அடிப்படை வசதிகளில்லை

 தாவரவியல் பூங்காவில் அடிப்படை வசதிகளில்லை

 தாவரவியல் பூங்காவில் அடிப்படை வசதிகளில்லை


ADDED : ஏப் 15, 2026 05:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 05:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை தாவரவியல் பூங்காவில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா பகுதிகளை தொடர்ந்து, வால்பாறைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டு சுற்றுலா பயணியரும் அதிக அளவில் வால்பாறை வருகின்றனர்.

இந்நிலையில், வால்பாறையில் நகராட்சி சார்பில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால் பூங்காவில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால், சுற்றுலா பயணியர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

சுற்றுலா பயணியர் கூறியதாவது:

வால்பாறை நகரில் அமைக்கப்பட்டுள்ள தாவரவியல் பூங்காவில், கேண்டீன் இருந்தும் பயன்பாட்டில் இல்லை. பூங்கா புதர் மண்டி காடு போல் காட்சியளிக்கிறது. இதனால் உள்ளே செல்லவே சுற்றுலா பயணியர் அச்சப்படும் நிலை உள்ளது.

தாவரவியல் பூங்காவை கண்டு ரசிக்கும் படியாக மலர் செடிகள் இல்லை. குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. மே மாதம் கோடை விடுமுறையில் சுற்றுலா பயணியர் அதிக அளவில் வருவர். அதற்கு முன்பாக, பூங்காவில் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us