/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பில்ட்மேட்' கட்டுமான கண்காட்சி வரும் 23ல் கோவையில் துவக்கம்
/
'பில்ட்மேட்' கட்டுமான கண்காட்சி வரும் 23ல் கோவையில் துவக்கம்
'பில்ட்மேட்' கட்டுமான கண்காட்சி வரும் 23ல் கோவையில் துவக்கம்
'பில்ட்மேட்' கட்டுமான கண்காட்சி வரும் 23ல் கோவையில் துவக்கம்
ADDED : ஜன 19, 2025 12:26 AM

கோவை: ஆர்க்கிடெக்ட்ஸ், என்ஜினியர்ஸ், பில்டர்ஸ் இணைந்து, 'பில்ட்மேட் 2025' எனும் தென் மாநிலங்களின், மிகப்பெரிய கட்டுமான பொருட்கள் கண்காட்சி, வரும் 23 முதல் 26ம் தேதி வரை, நீலாம்பூர், பி.எஸ்.ஜி., ஹைடெக் ஆடிட்டோரியத்தில் நடக்கிறது.
இது குறித்து, கண்காட்சியின் தலைவர் கர்ண பூபதி கூறியிருப்பதாவது:
430க்கும் மேற்பட்ட ஸ்டால்களுடன், புதுமையான கட்டடவியல் நுட்பங்களை, அறிமுகப்படுத்தும் விழாவாக இக்கண்காட்சி நடக்கவுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி, கண்காட்சி ஸ்பான்சர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கவுள்ளார்.
தொழிலதிபர் எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் ஜெயராம் வரதராஜன், பிரபல ஆர்க்கிடெக்ட் ரமணி சங்கர், அகில இந்திய முன்னாள் பில்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் பீஷ்மா ராதாகிருஷ்ணா, ஏ.சி.சி.இ., சேர்மன் விஜயகுமார் சனாப், பி.ஏ.ஐ., சேர்மன் விஸ்வநாதன் ஆகியோர் கண்காட்சியில் சிறப்புரையாற்றவுள்ளனர்.
மாணவர்கள் பங்குபெறும் வகையில், 'உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத்துறையில் உள்ள சவால்கள்', 'உயரமான கட்டடங்கள்', 'நவீன கட்டுமான யுக்திகள் 'அவினாசி சாலை மேம்பாலம்' போன்ற தலைப்புகளில், கருத்தரங்கமும் நடைபெறுகிறது. அனுபவம் வாய்ந்த வல்லுனர்கள் கலந்துரையாடுகின்றனர்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

